உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 18 Jun 2019 10:45 PM GMT (Updated: 18 Jun 2019 8:52 PM GMT)

அமெரிக்காவின் ஒர்லாண்டோ நகரில் நடைபெற்ற கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக டிரம்ப் முறைப்படி அறிவித்தார்.


* அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லாண்டோ நகரில் நடைபெற்ற கூட்டத்தில், அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக டிரம்ப் முறைப்படி அறிவித்தார். மேலும் இந்த தேர்தலில் தான் வெற்றி பெற அதிகவாய்ப்பு இருப்பதாக சர்வதேச கருத்துகணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார்.

* ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது கண்ணி வெடி தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா கூடுதலாக ஆயிரம் ராணுவ வீரர்களை மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு அனுப்பிவைத்துள்ளது.

* மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் உள்ள எல் போபோ எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டு சாம்பல் புகையை கக்கி வருகிறது. எரிமலையில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவுக்கு காற்றில் சாம்பல் பரவி வருவதால் மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

* அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்து இருப்பதாக ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசா காலம் முடிந்த பிறகும் அமெரிக்காவில் தங்கி இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story