அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கினார் டொனால்டு டிரம்ப்


அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கினார் டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 19 Jun 2019 2:02 AM GMT (Updated: 19 Jun 2019 2:02 AM GMT)

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டொனால்டு டிரம்ப் துவங்கினார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில்  அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் ஆகும். இதன்படி, கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி  வெற்றி பெற்று அமெரிக்காவின் 45-வதுஅதிபராக பதவியேற்றுக்கொண்டார். 

 சமீபத்தில்,  2-வது முறையாக தான் அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக டிரம்ப் அறிவித்து இருந்தார். இந்த  நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டொனால்டு டிரம்ப் இன்று முறைப்படி துவங்கினார். புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லண்டோவில் டிரம்ப்  பிரசாரத்தை துவங்கினார். 2020- நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. 

Next Story