உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கருணைக்கொலை சட்டப்பூர்வமானது + "||" + Euthanasia is legal in the state of Victoria, Australia

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கருணைக்கொலை சட்டப்பூர்வமானது

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கருணைக்கொலை சட்டப்பூர்வமானது
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில், கருணைக்கொலைக்கு சட்டப்பூர்வமான அங்கிகாரம் வழங்கப்பட்டது.
மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் தீராத நோய் மற்றும் தாங்க முடியாத வலி போன்றவற்றால் அவதிப்படுபவர்களை கருணைக்கொலை செய்வதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

இந்த சட்டம் அங்கு நேற்று அமலுக்கு வந்தது. இதன் மூலம் தீராத நோயால் பாதிக்கப்பட்டு 6 மாதங்களுக்கும் குறைவாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டவர்கள், நரம்புதிசு செயலிழப்பு போன்ற நோய்களால் தங்கமுடியாத வலியை அனுபவிப்பவர்களை கருணைக்கொலை செய்ய மருத்துவர்களை அணுகலாம்.


விக்டோரியா மாகாண தலைவர் ஆன்ட்ரூஸ் இதுபற்றி கூறுகையில், “பல்வேறு கட்ட ஆலோசனை மற்றும் தீவிர விசாரணைக்கு பிறகு கருணை அடிப்படையிலான இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. கருணைக்கொலை செய்வதற்காக இதுவரை 120 டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது” என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ: அவசரநிலை பிரகடனம்
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை பேரழிவு என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
2. ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி - அட்டவணை வெளியீடு
ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டில் நடக்கும் 16 அணிகள் இடையிலான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இறுதி அட்டவணையை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.
3. ரகசிய சட்டங்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய செய்தித்தாள்களின் முதல் பக்கம் இன்று கருப்பாக வெளியிடப்பட்டது
ரகசிய சட்டங்களுக்கு எதிராக ஆஸ்திரேலிய செய்தித்தாள்கள் இன்று தங்களது முதல்பக்கங்களை கருப்பாக வெளியிட்டன.
4. ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற ‘பாப்’ நட்சத்திரம் சியாவுக்கு விசித்திர நோய்
ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற ‘பாப்’ நட்சத்திரமான சியா, விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
5. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து 301 ரன்களில் ஆல்-அவுட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் 4-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 301 ரன்கள் எடுத்துள்ளது.