பிரான்சில் 4.9 ரிக்டர் அளவில் நில நடுக்கம்


பிரான்சில் 4.9 ரிக்டர் அளவில் நில நடுக்கம்
x
தினத்தந்தி 21 Jun 2019 10:33 AM GMT (Updated: 21 Jun 2019 10:33 AM GMT)

மேற்கு பிரான்சில் லோயர் பள்ளத்தாக்கு அருகே 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மேற்கு பிரான்ஸ் பகுதியில் இன்று காலை 8.50 மணியளவில் ப்ரெஸுவேர் நகருக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தெற்கில் போர்டியாக்ஸ் துவங்கி வடக்கில் நார்மண்டி வரை உணரப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

இதுவரை எந்த சேதமும் ஏற்படவில்லை என்று தேசிய சிவில் பாதுகாப்பு சேவையின் செய்தித் தொடர்பாளர் கர்னல் மைக்கேல் பெர்னியர் தெரிவித்துள்ளார். 

பொதுமக்கள் பலரும் இதனை உணர்ந்ததால் அச்சத்தில் உள்ளனர் என கூறியுள்ளார். ரிக்டர் அளவில் 4.9 என பதிவாகியிருப்பதாக தேசிய நில அதிர்வு சேவை மையம் செய்தி வெளியிட்டுள்ளது.

 பிரான்சின் லு மான்ஸ், நாண்டெஸ், ரென்னெஸ் மற்றும் கெய்ன் உள்ளிட்ட நகரங்கள் நிலநடுக்கத்தால் குலுங்கியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story