பூமியோடு தொடர்பு கொள்ள வேற்றுக் கிரகவாசிகள் மூன்று விரிவான தகவல்களைப் பூமிக்கு அனுப்பியுள்ளனர்


பூமியோடு தொடர்பு கொள்ள வேற்றுக் கிரகவாசிகள்  மூன்று விரிவான தகவல்களைப் பூமிக்கு அனுப்பியுள்ளனர்
x
தினத்தந்தி 22 Jun 2019 5:52 AM GMT (Updated: 22 Jun 2019 5:52 AM GMT)

பூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்த உயிரினங்கள் மூன்று விரிவான தகவல்களைப் பூமிக்கு அனுப்பியுள்ளன.

வாஷிங்டன்,

கலிபோர்னியாவில் உள்ள  வேற்று கிரக நுண்ணறிவுகளை (SETI)  தேடும் திட்ட அமைப்பு வேற்று கிரகவாசிகள்  குறித்த ஆழமான விண்வெளி ஆய்வுகளின் தொகுப்பை  இதுவரை இல்லாத அளவுக்கு வெளியிட்டு உள்ளது. இந்த அமைப்பு  செயற்கை சமிக்ஞைகள், வானொலி அலைகள் மற்றும் விண்வெளியில் மேம்பட்ட வாழ்க்கைக்கான ஆதாரம் ஆகியவற்றிற்காக 1,300 க்கும் மேற்பட்ட அன்னிய நட்சத்திரங்களை செய்டி (SETI)  ஸ்கேன் பகுப்பாய்வு செய்து தகவல்களை வெளியிட்டுள்ளது.  10,73,741,824 மெகாபைட் தகவல்களை   வெளியிட்டு உள்ளது. இது  1,600 ஆண்டுகள் தொடர்ந்து இசை கேட்க கூடிய தகவல் கொள்ளளவு ஆகும்.

இந்த தகவல்களை கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி மற்றும் பசுமை வங்கி தொலைநோக்கி மற்றும் பார்க்ஸ் தொலைநோக்கி ஆகியவை சேகரித்து உள்ளன.

இது குறித்து திட்ட விஞ்ஞானி டாக்டர் டேனி பிரைஸ் கூறியதாவது:-

இந்த தகவல் வெளியீடு  மிகப்பெரிய மைல்கல் ஆகும். அருகிலுள்ள நட்சத்திரங்களில் ஆயிரக்கணக்கான மணிநேரம் பில்லியன்கணக்கான அதிர்வெண் சேனல்களில் ஆய்வு செய்து உள்ளோம் என கூறினார்

பூமியோடு தொடர்பு கொள்ளும் முயற்சியாக வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்த உயிரினங்கள் மூன்று விரிவான தகவல்களைப் பூமிக்கு அனுப்பியுள்ளன.

 அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம், ரஷ்ய நாட்டைச் சேர்ந்த விண்வெளி ஆய்வு மையம் ஆகிய இரண்டு அமைப்புகளுக்கும் தான் வேற்றுக் கிரக உயிரினங்கள் அனுப்பிய தகவல்கள் முதலாவதாகக் கிடைத்துள்ளன. கிடைத்த தகவல்கள் குறித்து விண்வெளி ஆய்வாளர்கள் ஆய்வு செய்து  வருகின்றனர். அந்த தகவல்கள் வெளிப்படுத்தும் செய்திகள் குறித்து அவர்களால் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை.

பூமியை விட்டு மிகத் தொலைவில் உள்ள விண்மீன் ஒன்றிலிருந்து தங்களுடைய ரேடியோவுக்கு சிக்னல் கிடைத்ததை அறிந்த விஞ்ஞானிகள் மிகவும் சந்தோசம் அடைந்தனர். இந்த சிக்னல் சூரியனைப் போன்ற மிகப் பெரிய நட்சத்திரம் ஒன்றிலிருந்து வந்ததாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த நட்சத்திரத்தை HD 164595 என்னும் பெயரால் அடையாளப்படுத்துகின்றனர். இந்த அடையாளம் மிகச் சரியானதுதானா என்று சொல்ல முடியவில்லை. இருந்தாலும் பூமியை விட்டு மிகத் தொலைவில் உள்ள விண்மீன் ஒன்றிலிருந்து தகவல் பரிமாற்றத்திற்கான சிக்னல் கிடைத்திருப்பதுதான் இங்கு முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்த விண்மீன் ஹெர்குலஸ் என்னும் நட்சத்திரக் கூட்டத்திலிருந்து சுமார் 95 ஒளி ஆண்டுகள் (light years ) தொலைவில் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

இது ஒரு இயற்கையான நிகழ்வுதான், இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். நாசாவுக்கும், ரஷ்ய விண்வெளி அமைப்பிற்கும் வேற்றுக் கிரகத்திலிருந்து தகவல்கள் கிடைப்பது இது முதல் முறை அல்ல எனவும் சில விண்வெளி வீரர்களும், விஞ்ஞானிகளும் கூறுகின்றனர்.

Next Story