உலக செய்திகள்

இலங்கையில் அவசர நிலை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு: அதிபர் சிறிசேனா உத்தரவு + "||" + Sri Lanka extends emergency in surprise move

இலங்கையில் அவசர நிலை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு: அதிபர் சிறிசேனா உத்தரவு

இலங்கையில் அவசர நிலை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு: அதிபர் சிறிசேனா உத்தரவு
இலங்கையில் அவசர நிலையை திடீரென மேலும் ஒரு மாதம் நீட்டித்து அதிபர் சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு,

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 3 கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் 3 சொகுசு ஓட்டல் களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து ஏப்ரல் 22-ந் தேதி இலங்கை அதிபர் சிறிசேனா நாட்டில் அவசர நிலையை பிறப்பித்தார். இதன்மூலம் பொது பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்தது. இந்த சட்டம் போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு சந்தேகத்துக்குரிய யாரையும் கைது செய்ய அதிகாரம் வழங்குகிறது.


குண்டு வெடிப்புக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ காரணமான 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 10 பெண்களும் அடக்கம். அவசர நிலை இருப்பதால் பல்வேறு நாடுகள் இலங்கைக்கு சுற்றுலா செல்ல தங்கள் குடிமக்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தது.

சிறிசேனா கடந்த மே மாத இறுதியில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு தூதர்களுடன் பேசினார். இலங்கையில் பாதுகாப்பு நிலைமை 99 சதவீதம் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டது. குண்டுவெடிப்புக்கு காரணமான அனைவரையும் பாதுகாப்பு படை ஒன்று கைது செய்துவிட்டது அல்லது கொன்று விட்டது. எனவே அவசர நிலை சட்டங் களை ஜூன் 22-ந் தேதியுடன் முடிவுக்கு கொண்டுவர அனுமதி வழங்கியுள்ளேன் என்று அவர்களிடம் கூறியிருந்தார்.

ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அவசர நிலை உத்தரவின் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. எனவே தொடர்ந்து அவசர நிலை நீட்டிக்கப்படாது என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் நேற்று திடீரென இலங்கையில் அவசர நிலை மேலும் ஒரு மாதம் நீட்டிப்பதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் அதிபர் சிறிசேனா, “பொது பாதுகாப்பை கருத்தில் கொண்டு இலங்கையில் அவசர நிலை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

சிறிசேனா திடீரென தனது முடிவை ஏன் மாற்றிக்கொண்டார் என்பது குறித்து அரசு தரப்பில் எந்த காரணமும் கூறப்படவில்லை.


தொடர்புடைய செய்திகள்

1. வடக்குப்பாளையத்தில் சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் கலெக்டர் அன்பழகன் தொடங்கி வைத்தார்
வடக்குப்பாளையத்தில் சிறப்பு கால்நடை பாதுகாப்பு திட்ட முகாமை கலெக்டர் அன்பழகன் தொடங்கி வைத்தார்.
2. உலக கோப்பை கிரிக்கெட்: இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இலங்கை-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோத உள்ளன.
3. ‘இலங்கைக்கு எதிரான வெற்றி கசப்பான இனிப்பு’ - பிளிஸ்சிஸ்
இலங்கைக்கு எதிரான வெற்றி கசப்பான இனிப்பு போன்றது என தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் தெரிவித்தார்.
4. இலங்கையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு மரண தண்டனை
இலங்கையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
5. இலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர்: கர்டினல் ரஞ்சித்
இலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர் என்று கர்டினல் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.