உலக செய்திகள்

அமெரிக்காவில் விமான விபத்தில் 9 பேர் பலி: வானில் வீர சாகசத்தில் ஈடுபட்டபோது பரிதாபம் + "||" + At least 9 killed after aircraft crashes in Hawaii, authorities say

அமெரிக்காவில் விமான விபத்தில் 9 பேர் பலி: வானில் வீர சாகசத்தில் ஈடுபட்டபோது பரிதாபம்

அமெரிக்காவில் விமான விபத்தில் 9 பேர் பலி: வானில் வீர சாகசத்தில் ஈடுபட்டபோது பரிதாபம்
அமெரிக்காவில் விமான விபத்தில் 9 பேர் பலியாகினர். வானில் வீர சாகசத்தில் ஈடுபட்டபோது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்தது.
வாஷிங்டன்,

அமெரிக்க நாட்டில் ஹவாய் தீவில் இரட்டை என்ஜின் கொண்ட ‘தி கிங் ஏர்’ விமானத்தில் 9 பேர் நேற்று முன்தினம் மாலை வானில் வீர சாகச சுற்றுலா சென்றனர். ஆனால் வானில் வீர சாகசம் செய்து கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில் அந்த விமானம், ஹோனோலுலு நகருக்கு அருகே டில்லிங்ஹாம் விமான தளம் அருகே மோதி தீப்பிடித்தது.விபத்து குறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். அவர்கள் எரிந்துகொண்டிருந்த விமானத்தில் தீயை அணைத்தனர்.


இருப்பினும் விமானத்தில் சாகச பயணம் மேற்கொண்டிருந்த 9 பேரும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து தீயணைப்பு படை அதிகாரி மேனுவல் நேவிஸ் கூறும்போது, “நாங்கள் பார்த்த மிக துயரமான விமான விபத்து இது. பயணம் செய்தவர்களின் பெயர் விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. விமானம் விபத்துக்குள்ளானபோது அதில் பயணம் செய்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் விமான தளம் அருகே இருந்துள்ளனர்” என குறிப்பிட்டார்.விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஹோனோலுலு நகர மேயர் கிர்க் கால்டுவெல் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.

விபத்து தொடர்பாக மத்திய சிவில் விமான நிர்வாகம் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சூரியனைவிட 1000 மடங்கு பெரிய நட்சத்திரம் பெட்டல்ஜியூஸ் விரைவில் வெடித்து சிதறும்
வானில் மிகவும் பிரகாசமான 12-வது நட்சத்திரம் பெட்டல்ஜியூஸ் விரைவில் வெடித்து சிதறும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
2. கை கொடுக்காமல் அவமானப்படுத்திய டிரம்ப்... உரையின் நகலை கிழித்தெறிந்த நான்சி
அமெரிக்கா பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, டிரம்ப் உரையின் நகலை கிழித்த சம்பவம் சரச்சையை கிளப்பியுள்ளது.
3. சிறுவனுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பி நாடு கடத்தலை எதிர்கொள்ளும் இந்திய ஆசிரியை
13 வயது சிறுவனுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பி காதல் வலையில் விழ வைத்த ஜார்ஜியா நடுநிலைப்பள்ளி ஆசிரியை, நாடு கடத்தலை எதிர்கொள்ளலாம் என செய்தி வெளியாகியுள்ளது.
4. திருமணத்தை விட சிறையே சிறந்தது காதலி தொல்லையால் வேண்டுமென்றே திருடி சிறை சென்ற வாலிபர்
திருமண செய்துகொள்ள வற்புறுத்திய காதலியிடம் இருந்து தப்பிக்க வேண்டுமென்றே திருடி வாலிபர் ஒருவர் சிறைக்குச் சென்று உள்ளார்.
5. மீன்பிடிக்கச் சென்ற சிறுவன் மீது பாய்ந்த மீன் கழுத்தை துளைத்து மறுபக்கம் வந்தது
இந்தோனேசியாவில் தனது பெற்றோருடன் மீன்பிடிக்கச் சென்ற ஒரு சிறுவன் மீது மீன் ஒன்று பாய்ந்ததால், அவர் தற்போது பரிதாப நிலையில் உள்ளார்.