உலக செய்திகள்

இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர்; ரனில் விக்ரமசிங்கே + "||" + All NTJ members blamed for Easter Sunday attacks arrested: PM Wickremesinghe

இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர்; ரனில் விக்ரமசிங்கே

இலங்கை குண்டுவெடிப்பு  பயங்கரவாதிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர்; ரனில் விக்ரமசிங்கே
இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் குற்றச்சாட்டு கூறப்பட்ட அனைத்து பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டு விட்டனர் என பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
கொழும்பு,

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ந்தேதி ஈஸ்டர் பண்டிகையன்று தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.  இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது.  ஆனால் இதற்கு உள்நாட்டு பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (என்.டி.ஜே.) மீது இலங்கை அரசு குற்றம் சாட்டியது.

இலங்கை குண்டுவெடிப்புகளில் 258 பேர் பலியாகினர்.  500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  இதில் 9 பேர் தற்கொலை வெடிகுண்டுகளை வெடிக்க செய்துள்ளனர்.  என்.டி.ஜே. அமைப்பின் தலைவரான ஜஹ்ரான் ஹாசிம் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியாகி விட்டார்.

இந்த நிலையில், இலங்கையின் தெற்கே கல்லி நகரில் கூட்டமொன்றில் பேசிய அந்நாட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, ஜஹ்ரானின் குழுவை சேர்ந்த அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர் என போலீசாரிடம் இருந்து எனக்கு அறிக்கை வந்துள்ளது.

அவருடன் தொடர்பு வைத்திருந்தவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.  ஜஹ்ரானின் போதனை கூட்டங்களில் கலந்து கொண்டோரிடமும் விசாரிக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.