உலக செய்திகள்

கம்போடியாவில் அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது; 7 பேர் உயிரிழப்பு + "||" + In Cambodia Apartment building fell; 7 people killed

கம்போடியாவில் அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது; 7 பேர் உயிரிழப்பு

கம்போடியாவில் அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது; 7 பேர் உயிரிழப்பு
கம்போடியாவில் கட்டப்பட்டுக்கொண்டிருந்த அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில், 7 பேர் உயிரிழந்தனர்.
நாம்பென்,

கம்போடியா நாட்டின் சிஹானவ்க்வில்லே என்ற இடத்தில், ஒரு சீன நிறுவனத்துக்காக 7 மாடிகளை கொண்ட கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. நேற்று அதிகாலை 5 மணிக்கு கட்டுமானப்பணி நடந்து கொண்டிருந்தபோது, அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது.


இடிபாடுகளில், கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்கள் அலறித்துடித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்தில் பொக்லைன் எந்திரங்களுடன் மீட்பு பணி முடுக்கி விடப்பட்டது. இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழந்து விட்டனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு விட்டன. 20 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இருப்பினும் இடிபாடுகளுக்கு மத்தியில் இன்னும் பலர் சிக்கிக்கொண்டிருப்பதாகவும் அவர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடந்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.சம்பவ இடத்தில் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் பலரை காணவில்லை என அந்த நாட்டின் தகவல் துறை மந்திரி கியு கன்ஹரித் கூறினார். கட்டிடம் இடிந்து விழுந்ததின் காரணம் என்ன என்பது உடனடியாக தெரிய வரவில்லை.

இது தொடர்பாக ஒரு சீனப்பெண் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீசார் கூறினர்.


தொடர்புடைய செய்திகள்

1. கன்னியாகுமரியில் பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீவிபத்து சுற்றுலா பயணிகள் அவதி
கன்னியாகுமரியில் பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டதால் சூரியன் மறையும் காட்சியை காணச் சென்ற சுற்றுலா பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.
2. மும்பையில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து 55 பேர் உயிரோடு புதைந்தனர் - 11 பேரின் உடல்கள் மீட்பு
மும்பை டோங்கிரியில் 4 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்த விபத்தில் 55 பேர் உயிரோடு புதைந்தனர். இதில் 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.
3. கோவில்பட்டி அருகே சாலை விபத்து; 3 பேர் பலி
கோவில்பட்டி அருகே சாலை விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர்.
4. புதுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி
புதுக்கோட்டை நகராட்சி குப்பை கிடங்கில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் இருந்து வரும் புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
5. அரியமங்கலத்தில் குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி
அரியமங்கலத்தில் உள்ள குப்பைக்கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால், எழுந்த புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.