உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு புதிய ராணுவ மந்திரி - மார்க் எஸ்பரை தேர்வு செய்தார், டிரம்ப் + "||" + The new military minister for the United States - Selected by Mark Esper, Trump

அமெரிக்காவுக்கு புதிய ராணுவ மந்திரி - மார்க் எஸ்பரை தேர்வு செய்தார், டிரம்ப்

அமெரிக்காவுக்கு புதிய ராணுவ மந்திரி - மார்க் எஸ்பரை தேர்வு செய்தார், டிரம்ப்
அமெரிக்காவுக்கு புதிய ராணுவ மந்திரியாக மார்க் எஸ்பரை டிரம்ப் தேர்வு செய்தார்.
வாஷிங்டன்,

வல்லரசு நாடுகளுடன் 2015-ம் ஆண்டு, ஈரான் செய்து கொண்ட அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு திடீரென விலகியது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையேயான உறவு மிக மோசமாகி வருகிறது.


சமீபத்தில் கூட அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியது. அதைத் தொடர்ந்து ஈரானின் 3 ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டு, பின்னர் கடைசி நேரத்தில் திரும்பப்பெற்றார். இந்த நெருக்கடியாக கால கட்டத்தில் இப்போது அமெரிக்காவில் ராணுவ மந்திரி பதவி காலியாக உள்ளது. ராணுவ மந்திரியாக இருந்து வந்த ஜிம் மேட்டிஸ் கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி பதவி விலகினார். அதைத் தொடர்ந்து ராணுவ மந்திரி பொறுப்பை வகித்து வந்த பேட்ரிக் ஷனகன் அந்தப் பதவியில் தொடர விரும்பவில்லை.

இந்த நிலையில் புதிய ராணுவ மந்திரியாக மார்க் எஸ்பர் (வயது 55) என்பவரை ஜனாதிபதி டிரம்ப் தேர்வு செய்தார்.

இவரது நியமனத்துக்கு நாடாளுமன்ற செனட் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும். செனட் சபையில் குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளதால் மார்க் எஸ்பர் நியமனத்துக்கு ஒப்புதல் கிடைப்பதில் சிக்கல் ஏதும் இருக்காது.


தொடர்புடைய செய்திகள்

1. சிரியா எல்லையில் தாக்குதல்: துருக்கி மீது பொருளாதார தடை விதித்து அமெரிக்கா உத்தரவு
சிரியாவில் குர்திஷ் போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிரான துருக்கியின் ராணுவ தாக்குதலைத் தடுக்கும் நோக்கில் டிரம்ப் துருக்கி மீது பொருளாதாரத் தடைகளை விதித்து உத்தரவிட்டு உள்ளார்.
2. அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சு தோல்வி - வடகொரியா தகவல்
அமெரிக்காவுடனான அணு ஆயுத பேச்சு தோல்வியில் முடிந்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது.
3. அமெரிக்காவில் பயங்கரம்: மதுபான விடுதியில் துப்பாக்கி சூடு; 4 பேர் பலி
அமெரிக்காவில் மதுபான விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 4 பேர் பலியாயினர்.
4. அமெரிக்காவில் இந்திய தொழில் அதிபர் கடத்தி கொலை
அமெரிக்காவில் இந்திய தொழில் அதிபர் கடத்தி கொல்லப்பட்டார்.
5. அமெரிக்காவில் சீக்கிய போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை
அமெரிக்காவில் சீக்கிய போலீஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.