உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 23 Jun 2019 10:15 PM GMT (Updated: 23 Jun 2019 7:15 PM GMT)

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது.


* சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று முன்தினம் இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோலில் 5.4 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் 19 பேர் காயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* கம்போடியாவின் சிஹானோக்வில்லே மாகாணத்தில் கட்டப்பட்டு வந்த 7 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் 7 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. நேற்று பலி எண்ணிக்கை 17ஆகஉயர்ந்தது.

* மியான்மரின் ராகினே மாகாணத்தில் உள்ள சிட்வே நகரில் ராணுவவீரர்கள் சென்றுகொண்டிருந்த படகு மீது, பயங்கரவாதிகள் ராக்கெட் குண்டுகளை வீசி எறிந்ததில் 3 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

* ஈரானின் வான்பரப்பில் நுழைந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதால், ஈரானின் ஹோர்முஸ் மாகாணம் மற்றும் ஓமன் வளைகுடா பகுதி வழியே செல்லும் சவுதி அரேபியா விமானங்கள் மாற்றுபாதையில் இயக்கப்படுகின்றன.

* அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* கத்தார் இளவரசர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி, 2 நாள் அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார். அங்கு அவர் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பிரதமர் இம்ரான்கானை சந்தித்து பேசினார். அப்போது வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா தொடர்பாக இரு நாடுகள் இடையே 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.


Next Story