உலக செய்திகள்

ஜப்பானில் ருசிகரம்: புல்லட் ரெயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை + "||" + Japan: A single snail that stopped bullet rails

ஜப்பானில் ருசிகரம்: புல்லட் ரெயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை

ஜப்பானில் ருசிகரம்: புல்லட் ரெயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை
ஜப்பானில் புல்லட் ரெயில்களை, ஒற்றை நத்தை ஒன்று நிறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டோக்கியோ,

ஜப்பானில் இயக்கப்படும் அதிவேக புல்லட் ரெயில்கள் நேரம் தவறாமைக்கு உலகளவில் முன்னுதாரணமாக இருந்து வருகின்றன. நிலநடுக்கம், கன மழை போன்ற கடுமையான இயற்கை சீற்றங்களின்போது கூட அங்கு புல்லட் ரெயில் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டது கிடையாது.


இந்த நிலையில், கடந்த மாதம் 30-ந் தேதி நாட்டின் தெற்கு பகுதியில் புல்லட் ரெயில்கள் வழித்தடத்தில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக 25 புல்லட் ரெயில்களின் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டது. இதனால் 12 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் பாதிப்புக்கு உள்ளானார்கள்.

இந்த நிலையில், புல்லட் ரெயில் சேவை பாதிப்புக்கு ஒரு நத்தைதான் காரணமாக இருந்திருக்கிறது என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது. மின்சாரம் தடைப்பட்டதற்கான காரணம் குறித்து புல்லட் ரெயில் ஊழியர்கள் ஆராய்ந்தபோது, ரெயில் பாதைக்கு தொடர்புடைய ‘எலக்ட்ரானிக்’ கருவியில் உயிர் இழந்த நிலையில் நத்தை ஒன்றை மீட்டனர்.

கட்டுப்பாட்டு அறையில் உள்ள எலக்ட்ரானிக் கருவியை கடக்க முயன்றபோது, நத்தை மீது மின்சாரம் பாய்ந்து, அதனால் மின்சாரம் தடைப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இயற்கை பேரிடர்களால் கூட நிறுத்த முடியாத ஜப்பான் புல்லட் ரெயில் சேவையை ஒரு நத்தை நிறுத்திவிட்டது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ஜப்பானை நோக்கி நகர்ந்து வரும் இரண்டு புதிய புயல்கள்
ஜப்பானை நோக்கி மேலும் இரண்டு புயல்கள் நகர்ந்து வருவதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2. ஜப்பானில் ஹகிபிஸ் புயல் தாக்குதல் : பலி எண்ணிக்கை 47 ஆக உயர்வு
ஜப்பானில் ஹகிபிஸ் புயல் தாக்குதலால் பலி எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.
3. ஜப்பானை தாக்கிய ‘ஹகிபிஸ்’ புயல்: 2 ஆயிரம் விமானங்கள் ரத்து, 42 லட்சம் பேர் வெளியேற்றம்
ஜப்பானில் நேற்று ‘ஹகிபிஸ்‘ புயல் தாக்கியது. இதன் காரணமாக 2 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 42 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர்.
4. ஜப்பானில் கண்ணுக்கு தெரியாத மை தயாரித்து கட்டுரை எழுதிய மாணவி
ஜப்பானில் கண்ணுக்கு தெரியாத மை தயாரித்து மாணவி ஒருவர் கட்டுரை எழுதினார்.
5. ஜப்பானில் ‘ஹகிபிஸ்’ எனும் சக்திவாய்ந்த புயல் தாக்க உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை
ஜப்பானில் இன்னும் ஓரிரு தினங்களில் ‘ஹகிபிஸ்’ எனும் சக்திவாய்ந்த புயல் தாக்க உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.