பிரதமர் மோடியுடன் அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி சந்தித்து பேச்சுவார்த்தை


பிரதமர் மோடியுடன் அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி சந்தித்து பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 26 Jun 2019 5:52 AM GMT (Updated: 26 Jun 2019 5:52 AM GMT)

பிரதமர் மோடியை அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி இன்று சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டார்.

புதுடெல்லி,

அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.  இதற்காக நேற்று அவர் புதுடெல்லி வந்திறங்கினார்.  இந்திய வெளியுறவு துறை மந்திரி எஸ். ஜெய்சங்கரை இன்று சந்தித்து பேசுகிறார்.

இதுபற்றி வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறும்பொழுது, இருதரப்பு மற்றும் மண்டல விவகாரங்கள் பற்றிய தொலைநோக்கு விசயங்கள் பரிமாறி கொள்ளப்படும் என கூறினார்.

இந்நிலையில், பிரதமர் மோடியை பாம்பியோ இன்று சந்தித்து பேசினார்.  பிரதமராக 2வது முறையாக பொறுப்பேற்ற பின்பு மோடி மேற்கொள்ளும் உயர்மட்ட அளவிலான முதல் சந்திப்பு இதுவாகும்.  இந்தியா வேகமுடன் வளர்ச்சியை எட்டுவதற்கான முயற்சியில் தைரியமுடன் சீர்திருத்தங்களை மேற்கொள்ள மோடிக்கு ஆதரவு கரம் நீட்டும் வகையில் இந்த சந்திப்பு அமைந்துள்ளது.

வருகிற 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஜி 20 நாடுகளின் கூட்டமைப்பின் போது, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை பிரதமர் மோடி சந்திக்க இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

தீவிரவாதம், ஆப்கானிஸ்தான் தொடர்புடைய விவகாரங்கள், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல் விவகாரம், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக விவகாரங்கள், இந்தோ பசிபிக் மண்டலம் மற்றும் பிற விவகாரங்கள் பற்றி பாம்பியோ மற்றும் ஜெய்சங்கர் இடையிலான இன்றைய சந்திப்பில் ஆலோசிக்கப்படும்.

Next Story