பாகிஸ்தானில் முதன்முறையாக சீக்கியர்களுக்கான பள்ளி அமைய அரசு ஒப்புதல்


பாகிஸ்தானில் முதன்முறையாக சீக்கியர்களுக்கான பள்ளி அமைய அரசு ஒப்புதல்
x
தினத்தந்தி 26 Jun 2019 9:59 AM GMT (Updated: 26 Jun 2019 9:59 AM GMT)

பாகிஸ்தானில் முதன்முறையாக சீக்கியர்களுக்கான பள்ளி அமைய அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பெஷாவர்,

பாகிஸ்தானில் சீக்கிய மத பிரதிநிதிகள் தங்களது சமூகத்தினருக்காக தனியாக பள்ளி ஒன்றை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதுபற்றி கைபர் பக்துன்குவா அரசு நிர்வாகம் வருடாந்திர பட்ஜெட் 2019-20ன் ஒரு பகுதியாக, சிறுபான்மை விவகார துறைக்கு ரூ.5.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.  இதேபோன்று சிறுபான்மை சமூகத்தினரின் திருவிழாக்களை நடத்துவதற்காக ரூ.86 லட்சம் நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது.

இதன்படி அந்நாட்டின் பெஷாவர் நகரில் முதல் சீக்கிய பள்ளி அமைகிறது.  இதற்கான கட்டிடம் கட்டும் பணிக்காக ரூ.22 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

Next Story