உலக செய்திகள்

சீனாவில் இரும்பு கடையில் தீ விபத்து - 6 பேர் உடல் கருகி சாவு + "||" + Fire at a steel shop in China - 6 people die

சீனாவில் இரும்பு கடையில் தீ விபத்து - 6 பேர் உடல் கருகி சாவு

சீனாவில் இரும்பு கடையில் தீ விபத்து - 6 பேர் உடல் கருகி சாவு
சீனாவில் இரும்பு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உடல் கருகி பலியாயினர்.
பீஜிங்,

சீனாவின் குவாங்டாங் மாகாணம் தான்சூ நகரில் இரும்பு பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று உள்ளது. இங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் நேற்று காலை வழக்கம் போல் கடையை திறந்து, பணிகளை தொடங்கினர். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக கடையில் திடீரென தீப்பிடித்தது. கண்இமைக்கும் நேரத்தில் மளமளவென பரவிய தீ கடை முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது.


இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அலறிஅடித்தபடி கடையை விட்டு வெளியே ஓடினர். ஆனால் கடையின் நாலாபுறமும் தீ சூழ்ந்து கொண்டதால் சில தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

இதற்கிடையில் அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் தீயின் கோரப்பிடியில் சிக்கி ஊழியர்களில் 6 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர். இரும்பு கடையில் தீப்பிடித்தது எப்படி என்பது உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. தேனி அருகே, தனியார் மசாலா நிறுவன குடோனில் பயங்கர தீ விபத்து - பல கோடி ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்
தேனி அருகே தனியார் மசாலா நிறுவன குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
2. சீனாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு
சீனாவில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
3. சீனாவில் பாலம் இடிந்து விழுந்து 3 பேர் பலி
சீனாவில் நெடுஞ்சாலையில் உள்ள பாலம் இடிந்து வாகனங்கள் மீது விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர்.
4. பீஜிங்கில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார் சீன அதிபர் ஜி ஜின்பிங்
மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள அதிகாரபூர்வமற்ற 2 நாட்கள் சந்திப்புக்காக பீஜிங் நகரில் இருந்து சீன அதிபர் ஜி ஜின்பிங் தனி விமானத்தில் இன்று காலை புறப்பட்டார்.
5. பாகிஸ்தானில் ராணுவத்தின் கை ஓங்குகிறது? தலையாட்டி பொம்மையாகும் இம்ரான்கான்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் சீனாவுக்கு சென்ற ராணுவத் தலைமைத் தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா, ராணுவத்தின் அதிகார மையத்தை உறுதி செய்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...