உலக செய்திகள்

உலகைச்சுற்றி... + "||" + Around the world

உலகைச்சுற்றி...

உலகைச்சுற்றி...
* சீனாவின் ஹெனன் மாகாணத்தில் உள்ள உயிரியல் தொழிற்கூடத்தில் பயங்கர வெடிவிபத்து நேரிட்டது. இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
* எகிப்து நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள சினாய் பிராந்தியத்தின் தலைநகர் எல் அரிஸ் நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் போலீசார் 7 பேர் பலியாகினர். அதனை தொடர்ந்து போலீசார் நடத்திய தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

* சர்வதேச போதைப்பொருள் கடத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு, மியான்மரில் ரூ.747 கோடி மதிப்பிலான பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை போலீசார் தீ வைத்து அழித்தனர்.

* ஆப்கானிஸ்தானின் பரா மாகாணத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அதனை தொடர்ந்து போலீசார் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இந்த மோதலில் 4 போலீசார் பலியாகினர். அதே போல் பயங்கரவாதிகள் 6 பேர் கொல்லப்பட்டனர்.