உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 28 Jun 2019 10:15 PM GMT (Updated: 28 Jun 2019 8:00 PM GMT)

ஈராக்கின் கிர்குக் மாகாணத்தில் ஒரு கார் மற்றும் மினிபஸ்சில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்து சிதறின.


* ஈராக்கின் கிர்குக் மாகாணத்தில் ராஸ் அல் ஜெசிர் நகரில் ஒரு கார் மற்றும் மினிபஸ்சில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்து சிதறின. இதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

* தாய்லாந்தில் சூரத் தனாய் மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும், போலீசாருக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் போலீஸ்காரர் ஒருவர் பலியானார்.

* ஆப்கானிஸ்தானின் பாக்டியா மாகாணத்தில் உள்ள கார்டிசிராய் மாவட்டத்தில் பதுங்கி இருந்த ஹக்கானி வலைத்தள இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். இதில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

* ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஒரு பெண் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.

Next Story