உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 1 July 2019 9:15 PM GMT (Updated: 1 July 2019 7:27 PM GMT)

சீனாவில் யுனான் மாகாணத்தில் நேற்று முன்தினம் காட்டு யானைகள் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.

* ஆப்கானிஸ்தானில் நேற்று காலை காபூல் நகரத்தில் மக்கள் நெரிசலான நேரத்தில் சக்திவாய்ந்த குண்டு, பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் அந்த பகுதியே குலுங்கியது. இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 34 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 60 பேர் படுகாயம் அடைந்தனர்.

* ரஷியாவில் கம்சாட்லா தீபகற்ப பகுதியில் நேற்று நண்பகலில் திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 புள்ளிகளாக பதிவானது. இதன் சேத விவரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை.

* சீனாவின் இன்னர்மங்கோலியா தன்னாட்சி பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் இரவு ஒரு லாரியும், ஆட்களை ஏற்றி சென்ற மற்றொரு வாகனம் நேருக்கு நேர் மோதி நேரிட்ட சாலை விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 38 பேர் படுகாயம் அடைந்தனர்.

* நியூசிலாந்து நாட்டில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தத்தக்க பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த தடை விதித்து, நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

* சீனாவில் யுனான் மாகாணத்தில் நேற்று முன்தினம் காட்டு யானைகள் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.

* வடகொரியாவுக்கு நேற்று முன்தினம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சென்றதை அந்த நாட்டு ஊடகங்கள் அற்புதமான நிகழ்வு என வர்ணித்து கொண்டாடின.


Next Story