உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 3 July 2019 2:15 AM IST (Updated: 3 July 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

நைஜீரியாவில் டையெல்சா மாகாணத்தின் தலைநகர் அகுடமா எக்பெட்டியாமா நகரில் உள்ள போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 4 போலீசார் பலியாகினர்.

* ஜெர்மனியின் ஹெமலின் நகரில் இருந்து புறப்பட்டு சென்ற விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று, திடீரென அங்குள்ள வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரை இயக்கிய பெண் விமானி சம்பவ இடத்திலேயே பலியானார்.

* பிலிப்பைன்சின் சமர் மாகாணத்தில் உள்ள டோரோங்கான் நகரில் நேற்று சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* சவுதி அரேபியாவின் அசீர் மாகாணத்தின் தலைநகர் அப்ஹாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மீது, ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

* நைஜீரியாவில் டையெல்சா மாகாணத்தின் தலைநகர் அகுடமா எக்பெட்டியாமா நகரில் உள்ள போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 4 போலீசார் பலியாகினர்.

* ரஷியாவின் இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் இடைவிடாது கொட்டித்தீர்த்த கனமழையால் அங்குள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 14 பேர் பலியாகி இருக்கிறார்கள். குழந்தைகள் உள்பட சுமார் 200 பேர் காயம் அடைந்து இருக்கிறார்கள்.

Next Story