உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 3 July 2019 9:45 PM GMT (Updated: 3 July 2019 3:11 PM GMT)

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் காயமடைந்தனர்.

* ஆப்கானிஸ்தானின் தாய்குந்தி மாகாணத்தில் கஜ்ரான் மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேர் பலியாகினர். அதே போல் 35 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

* அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய நபர்கள் யார்? இதற்கான பின்னணி என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

* பிலிப்பைன்சில் முன்னாள் அதிபர் பெர்டினாண்ட் மார்கோசின் மனைவி இமெல்டா மார்கோசின் 90–வது பிறந்தநாளையொட்டி நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் சாப்பிட்ட 80 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story