உலக செய்திகள்

ஈராக்கில் பாதுகாப்பு படை நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 18 பேர் பலி + "||" + 18 IS militants killed in Iraq in anti-IS operations, airstrikes

ஈராக்கில் பாதுகாப்பு படை நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 18 பேர் பலி

ஈராக்கில் பாதுகாப்பு படை நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 18 பேர் பலி
ஈராக்கில் பாதுகாப்பு படை நடத்திய வான்வழி தாக்குதலில் 18 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
சிரியா, ஜோர்டான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய அண்டை நாடுகளுடன் எல்லை பகுதியை கொண்டிருக்கும் ஈராக்கின் அன்பர் பாலைவன பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து தீவிரமுடன் செயல்பட்டு வருகின்றனர்.  அவர்கள் பொதுமக்களை கடத்தி செல்வது அல்லது கொலை செய்வது தொடர்ந்து வருகிறது.

அவர்களை கட்டுக்குள் கொண்டு வர ஈராக் பாதுகாப்பு படை மற்றும் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படைகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.  இந்நிலையில் அங்குள்ள ஆகாஷத் பகுதியில் பதுங்கு குழி மீது நடந்த வான்வழி தாக்குதலில் 4 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

சிரியாவின் எல்லையையொட்டிய கிழக்கு பகுதியில் நடந்த வான்வழி தாக்குதலில் 4 ஐ.எஸ். தீவிரவாதிகளும், மொசூல் நகரின் மேற்கே ஈராக் படையினரின் தாக்குதலில் 2 ஐ.எஸ். தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.  அவர்களின் வாகனங்களும் சேதமடைந்தன.

சுரங்க பகுதியின் மீது நடந்த மற்றொரு வான்வழி தாக்குதலில் உள்ளே பதுங்கியிருந்த 5 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலியாகினர்.  சிரிய எல்லையை ஒட்டிய பாலைவன பகுதியில் அமெரிக்க கூட்டணி படையின் வான்வழி தாக்குதலில் 3 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.

கடந்த 2017ம் ஆண்டு இறுதியில் நாடு முழுவதும் ஈராக் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தீவிர வேட்டையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் முழுவதும் தோற்கடிக்கப்பட்டனர்.  எனினும் அவர்களில் மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதிகள் அல்லது பாலைவன பகுதிகள் மற்றும் கரடுமுரடான பகுதிகளில் தஞ்சமடைந்து கொண்டு பாதுகாப்பு படையினர் மீதும் மற்றும் பொதுமக்கள் மீதும் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர் என்கவுண்ட்டர்; கொல்லப்பட்டவர் லஷ்கர் இ தைபா இயக்க தளபதி
காஷ்மீர் என்கவுண்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டவர்களில் ஒருவர் லஷ்கர் இ தைபா இயக்க தளபதி என அறியப்பட்டு உள்ளது.
2. சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் நக்சலைட்டு சுட்டு கொலை
சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் நக்சலைட்டு சுட்டு வீழ்த்தப்பட்டார்.
3. காஷ்மீரில் குவிக்கப்படும் பாதுகாப்பு படை: கூடுதலாக 25 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் அனுப்பி வைப்பு
காஷ்மீருக்கு கூடுதலாக 25 ஆயிரம் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
4. சத்தீஷ்காரில் 4 நக்சலைட்டுகள் சுட்டு கொலை
சத்தீஷ்காரில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் 3 பெண்கள் உள்ளிட்ட 4 நக்சலைட்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
5. காஷ்மீரில் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே கடும் துப்பாக்கி சண்டை
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.