ஈரான் யுரேனிய மிரட்டல்: கவனமாக இருங்கள் -உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை


ஈரான் யுரேனிய மிரட்டல்: கவனமாக இருங்கள் -உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 July 2019 5:38 AM GMT (Updated: 4 July 2019 5:38 AM GMT)

ஈரானின் யுரேனிய மிரட்டல் குறித்து கவனமாக இருங்கள் என்று உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வாஷிங்டன் 

அமெரிக்கா-ஈரான் இடையே நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு தலைவரும், வெளியுறவுக் கொள்கை ஆணையத்தின் தலைவருமான மொஜ்தாபா சோல்னோர் மிரட்டல் விடுத்துள்ளார்.

அமெரிக்கா விதித்த தடைகளை மீறி எண்ணெய் வர்த்தகத்தை மேற்கொள்ள ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் உதவவில்லை என்றால், ஒப்பந்தப்படி  அனுமதிக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை அதிகரிப்பதைத் தவிர வேறுவழியில்லை என்று ஈரான் கூறியிருந்தது. 2015 அணுசக்தி  ஒப்பந்தத்தின் கீழ், அனுமதிக்கப்பட்டதை விட மேம்படுத்தப்பட்ட யுரேனியத்தை அதிகரிப்பதாக ஈரான் அறிவித்தது. இதற்கு அமெரிக்க அதிபர் நெருப்புடன் விளையாட வேண்டாம் என எச்சரித்து இருந்தார்.

இந்த நிலையில்  இது குறித்து அமெரிக்க அதிபர் தனது டுவிட்டரில்  கூறி இருப்பதாவது:-

ஈரான் ஒரு புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. புதிய அணுசக்தி ஒப்பந்தம் இல்லாவிட்டால் அவர்கள் யுரேனியத்தை "தாங்கள் விரும்பும் எந்த அளவுக்கும்" அதிகபடுத்துவோம் என்று ரூஹானி கூறுகிறார். ஈரான், அச்சுறுத்தல் குறித்து கவனமாக இருங்கள். இதற்கு முன்பு யாரும் கடிக்கப்படாதது போல அவர்கள் உங்களை கடிக்க வரலாம் என்று உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story