உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 4 July 2019 11:30 PM GMT (Updated: 4 July 2019 7:14 PM GMT)

* ஆஸ்திரேலியாவில் புகைப்பிடிக்கும் பழக்கத்தால் நாள் ஒன்றுக்கு 7 பேர் உயிர் இழப்பதாக ஆய்வு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

* மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுரசில் மோசமான வானிலை காரணமாக மீனவர்கள் சென்ற படகு கடலில் கவிழ்ந்ததில் 27 பேர் பலியாகினர். மேலும் 9 பேர் மாயமாகினர். அதே சமயம் 49 பேருடன் சென்ற மற்றொரு மீன்பிடி படகு அதே பகுதியில் மூழ்கியதாகவும், ஆனால் அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யிபின் நகரில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

* பிறநாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் ரஷியா தலையிடுவது இல்லை என்றும், இதுவே அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை விட ரஷியா தனித்துவமானது என்பதை உணர்த்துவதாகவும் அதிபர் புதின் கூறினார்.

* பெலருஸ் நாட்டின் தலைநகர் மின்ஸ்க் நகரில் நடந்த வானவேடிக்கை நிகழ்ச்சியின் போது, எதிர்பாராதவிதமாக அங்கு வெடிவிபத்து நேரிட்டது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

Next Story