உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 5 July 2019 11:00 PM GMT (Updated: 5 July 2019 4:44 PM GMT)

* அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை ஈரான் அதிகப்படுத்தி வருவது ஆபத்தானது என்றும், இதுகுறித்து உலக நாடுகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

* பஹாமஸ் நாட்டின் பிக் கிராண்ட் கே தீவிலிருந்து அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்துக்கு ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது. பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 7 பேரும் உயிரிழந்துவிட்டனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட அகதிகள் லிபியாவிலிருந்து ஐரோப்பா நோக்கி படகு ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். இந்த படகு துனிசியா கடற்பகுதி அருகே சென்றபோது, அதிக எடை காரணமாக திடீரென கவிழ்ந்தது. நீரில் தத்தளித்து கொண்டிருந்த 4 பேரை அந்த வழியாக சென்ற மீனவர்கள் மீட்டனர். சுமார் 80 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

Next Story