எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும் -துருக்கிக்கு அமெரிக்கா எச்சரிக்கை


எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும் -துருக்கிக்கு அமெரிக்கா எச்சரிக்கை
x
தினத்தந்தி 6 July 2019 6:54 AM GMT (Updated: 6 July 2019 6:54 AM GMT)

விரைவில் எஸ் 400 ரக ஏவுகணைகள் விரைவில் துருக்கியை சென்றடையும் என ரஷ்யா தெரிவித்துள்ளதை அடுத்து எதிர்மறையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க எச்சரித்துள்ளது.

மாஸ்கோ

துருக்கி அமெரிக்காவின் எஃப்-35 ரக போர் விமானம் மற்றும் ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை அமைப்பு இந்த இரண்டையும் வைத்திருக்க முடியாது எனவும், துருக்கி வீரர்களுக்கு எஃப்-35 இயக்கும் பயிற்சியை நிறுத்தப்போவதாகவும் ஏற்கெனவே அமெரிக்கா எச்சரித்திருந்தது. 

இந்த நிலையில் இன்னும் சில நாட்களில் எஸ் 400 ரக ஏவுகணை அமைப்புக்கள் துருக்கிக்கு விநியோகிக்கப்படும் என்றும், அதற்கான ஆயத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் நேற்று ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் கூறியிருந்தார். இதையடுத்து எதிர்மறையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என துருக்கியை மீண்டும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

Next Story