உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 6 July 2019 11:15 PM GMT (Updated: 6 July 2019 8:17 PM GMT)

* வெனிசூலா நாட்டின் மீது அமெரிக்கா தொடர்ந்து பொருளாதார தடைகள் விதித்து வருகிறது. இந்த பிரச்சினையில் ஐ.நா. சபையின் தலையீட்டை வெனிசூலா கோரி உள்ளது.

* தென் ஆப்பிரிக்காவில் 4-வது தொழிற்புரட்சி மாநாடு நடந்தது. இதில் பேசிய அந்த நாட்டின் அதிபர் சிரில் ராம்போசா, சீன தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய்க்கு முழுமையான ஆதரவு தெரிவித்தார்.

* ரஷியாவில் இர்குட்ஸ்க் பிராந்தியத்தில் பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளால் 22 பேர் உயிரிழந்தனர். 400-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

* துருக்கி நாட்டின் மத்திய வங்கியில் 2016-ம் ஆண்டு முதல் கவர்னர் பதவி வகித்து வந்தவர் முராத் செடின் கயா. வட்டி விகிதத்தை குறைப்பது தொடர்பாக இவருக்கும் அதிபர் தாயீப் எர்டோகனுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இந்த நிலையில் இவரை அதிரடியாக கவர்னர் பதவியில் இருந்து அதிபர் தாயீப் எர்டோகன் நீக்கி விட்டார். புதிய கவர்னராக உய்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Next Story