ஏமனில் அரசு ஆதரவு படைகள் தாக்குதல்; 20 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கொன்று குவிப்பு


ஏமனில் அரசு ஆதரவு படைகள் தாக்குதல்; 20 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கொன்று குவிப்பு
x
தினத்தந்தி 10 July 2019 7:50 AM IST (Updated: 10 July 2019 7:50 AM IST)
t-max-icont-min-icon

ஏமனில் அரசு ஆதரவு படைகள் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 20 பேரை கொன்று குவித்துள்ளன.

ஏடன்,

ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக உள்நாட்டு போரில் ஈடுபட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த அரசு ஆதரவு படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.  இதுபற்றி அரசு ஆதரவு படைகள் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தலியா பகுதியில் குவெட்டாபா நகரருகே முக்கிய ராணுவ தளங்கள் அமைந்துள்ளன.  இதன் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்த 2 முறை முயற்சித்தனர்.  இதனை அரசு ஆதரவு படைகள் வெற்றிகரமுடன்  முறியடித்தன.

அவர்களது தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலும் நடத்தப்பட்டது.  பல மணிநேரம் நடந்த இந்த சண்டையில் 20 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர்.  அவர்களில் ஒரு மூத்த தளபதியும்  அடங்குவார்.  பலர் காயமடைந்தனர் என தெரிவித்து உள்ளது.

இதேபோன்று இந்த மோதலின்பொழுது அபு காசிம் ஆடெல் என்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் படையின் மூத்த தளபதியும் மற்றும் அவரது 12 கூட்டாளிகளும் பிடிபட்டு உள்ளனர் என அதில் தெரிவித்து உள்ளது.  அந்நாட்டில் கடந்த 2014ம் ஆண்டு இறுதியில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிரான உள்நாட்டு போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story