உலக செய்திகள்

இங்கிலாந்து கப்பலை போர் கப்பல்கள் மறித்ததாக குற்றச்சாட்டு: ஈரான் மறுப்பு + "||" + UK: Iranian vessels tried to block British vessel in Gulf

இங்கிலாந்து கப்பலை போர் கப்பல்கள் மறித்ததாக குற்றச்சாட்டு: ஈரான் மறுப்பு

இங்கிலாந்து கப்பலை போர் கப்பல்கள் மறித்ததாக குற்றச்சாட்டு: ஈரான் மறுப்பு
இங்கிலாந்து கப்பலுக்கு ஈரானிய படகுகள் தொல்லை கொடுத்ததாக அமெரிக்க அதிகாரிகள் தரப்பு குற்றச்சாட்டை ஈரான் மறுத்து உள்ளது.
ஹர்முஸ் ஜலசந்தியில் இங்கிலாந்து  கப்பலுக்கு ஈரானிய படகுகள் தொல்லை கொடுத்ததாக அமெரிக்க அதிகாரிகள் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை விதித்ததை தொடர்ந்து கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஈரானின் தெற்குக் கடற்பகுதியில் பல கப்பல்கள் தாக்குதலுக்கு ஆளாகின.

இந்த தாக்குதலுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று  ஈரான் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில் நேற்று ஹர்முஸ் ஜலசந்தியில் இங்கிலாந்து  எண்ணெய்க் கப்பலை ஈரானிய கடற்படையை சேர்ந்த 3 கப்பல்கள் மறித்ததாக கூறப்படுகிறது.

தங்கள் பயணத்தை தடுக்கும் வகையில் ஈரான் கடற்படை கப்பல்கள் தொந்தரவு கொடுத்ததாகவும் பிறகு தங்கள் கப்பலில் இருந்து ஆயுதங்களை எடுத்து குறி வைத்த பிறகு ஈரான் கடற்படை கப்பல்கள் விலகிச் சென்றதாகவும் இங்கிலாந்து  தெரிவித்துள்ளது. 

ஈரானின்  கப்பல் படை இந்த  குற்றச்சாட்டுகளை மறுத்து உள்ளது. ஏதேனும் கப்பல்களைக் கைப்பற்ற உத்தரவு கிடைத்திருந்தால் உடனடியாக அவற்றை நிறைவேற்றியிருக்கும் என கூறி உள்ளது.

அதிகாரப்பூர்வ ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வியாழக்கிழமை கடற்படையிலிருந்து ஒரு அறிக்கையை வெளியிட்டது, "அன்னிய படகுகள், குறிப்பாக இங்கிலாந்து  கப்பல்களுடன் மோதல் இல்லை என அதில் கூறப்பட்டு உள்ளது.

சிரியாவிற்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் ஐரோப்பிய தடைகளை மீறுவதாக  ஈரானிய சூப்பர் டேங்கரை கைப்பற்றியது தொடர்பாக பிரிட்டன் “விளைவுகளை” எதிர்கொள்ளும் என்று ஈரானின் ஜனாதிபதி ஹசன் ரூஹானி எச்சரித்த ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் நிகழ்ந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி வெற்றி
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.
2. இங்கிலாந்து ; டிரக்கில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 39 பேரும் சீனர்கள் எனத் தகவல்
லண்டன் அருகே டிரக்கில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 39 பேரும் சீனர்கள் என்று இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
3. கண்டெய்னர் லாரியில் 39 உடல்கள் கண்டெடுப்பு: நினைத்து பார்க்க முடியாதது -பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிர்ச்சி
கண்டெய்னர் லாரியில் 39 உடல்கள் கண்டெடுக்கப்பட்டது நினைத்து பார்க்க முடியாதது என்றும் அதிர்ந்து போய் உள்ளதாகவும் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறி உள்ளார்.
4. இங்கிலாந்தில் 2 சிறுவர்கள் குத்திக்கொலை
இங்கிலாந்தில் 2 சிறுவர்கள் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டனர்.
5. ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இங்கிலாந்துக்கும் இடையே பிரெக்ஸிட் ஒப்பந்தம் எட்டப்பட்டது -பிரதமர் போரிஸ் ஜான்சன்
ஐரோப்பிய ஒன்றியத்திற்கும்-இங்கிலாந்துக்கும் இடையே பிரெக்ஸிட் ஒப்பந்தம் எட்டப்பட்டது என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறினார்.