‘டிரம்ப் தீர்க்கமான தலைவர், நேர்மையானவர் அல்ல’ அமெரிக்க கருத்துக்கணிப்பில் தகவல்

‘டிரம்ப் தீர்க்கமான தலைவர், நேர்மையானவர் அல்ல’ அமெரிக்க கருத்துக்கணிப்பில் தகவல்
x
தினத்தந்தி 11 July 2019 9:30 PM GMT (Updated: 11 July 2019 7:40 PM GMT)

அமெரிக்காவில் அந்த நாட்டைச் சேர்ந்த பகுப்பாய்வு மற்றும் ஆலோசனை நிறுவனம் கேலப், ஜனாதிபதி டிரம்ப் பற்றி ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி உள்ளது.

வாஷிங்டன், 

அமெரிக்காவில் அந்த நாட்டைச் சேர்ந்த பகுப்பாய்வு மற்றும் ஆலோசனை நிறுவனம் கேலப், ஜனாதிபதி டிரம்ப் பற்றி ஒரு கருத்துக்கணிப்பு நடத்தி உள்ளது.

இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்களில் 51 சதவீதம் பேர் டிரம்ப் தீர்க்கமான முடிவுகள் எடுப்பவர், வலுவான தலைவர் என கூறி உள்ளனர். அதே நேரத்தில் பெரும்பாலானோர் அவரது நேர்மை, நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கி உள்ளனர்.

34 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே டிரம்ப் நேர்மையானவர், நம்பகத்தன்மை கொண்டவர் என கூறி இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் கருத்துக்கணிப்பில் பங்கேற்ற குடியரசு கட்சியினரில் 75 சதவீதம் பேர் டிரம்ப் நேர்மையானவர் என கருத்து தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியில் 6 சதவீதம் பேர் மட்டுமே டிரம்ப் நேர்மையானவர் என கூறி இருக்கிறார்கள்.

Next Story