உலக செய்திகள்

மெக்சிகோவில் நிலச்சரிவு; வீடுகள் புதைந்ததில் 7 பேர் பலி + "||" + Landslide buries family of 7 in central Mexico

மெக்சிகோவில் நிலச்சரிவு; வீடுகள் புதைந்ததில் 7 பேர் பலி

மெக்சிகோவில் நிலச்சரிவு; வீடுகள் புதைந்ததில் 7 பேர் பலி
மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் புதைந்து ஒரே குடும்பத்தின் 7 பேர் பலியாகி உள்ளனர்.
மெக்சிகோ சிட்டி,

மெக்சிகோ நாட்டில் ஜூன் தொடங்கி அக்டோபர் வரை மழை காலம் ஆகும்.  அந்நாட்டின் மத்திய பகுதியில் சான்டோ தோமஸ் சவுத்லா பகுதியில் மலையை ஒட்டி பல வீடுகள் அமைந்துள்ளன.  அதனை அடுத்து குறுகலான ஆறு ஒன்றும் ஓடுகிறது.  இந்நிலையில், தங்களது குழந்தைகள் தொடக்க பள்ளியில் தேர்ச்சி அடைந்து பட்டம் பெற்றதற்காக அதனை விழாவாக கொண்டாட ஒரு குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.  இதற்காக இந்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அவர்கள் ஒன்றாக கூடியுள்ளனர்.

இதனிடையே தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.  இதனால் அந்த பகுதியில் உள்ள பல வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன.  இந்த சம்பவத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த வீடும் மண்ணில் புதைந்துள்ளது.  இதில், ஒரே குடும்பத்தினை சேர்ந்த 4 சிறுவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.  இதுபற்றிய தகவல் அறிந்து அதிகாரிகள் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.  அங்கு இருந்த 2 குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்து உள்ளனர்.

தொடர்ந்து இங்கு அதிகளவில் மழை பெய்ய கூடும் என்பதனால் நிலச்சரிவுகளில் இருந்து காப்பதற்காக இரண்டு வீடுகளில் வசித்தவர்களை அவர்கள் வெளியேற்றியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நிலச்சரிவால் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வந்த கனமழையால் ராம்பன் மாவட்டம் பேட்டரி சேஷ்மா பகுதியில் நேற்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது.
2. நிலச்சரிவால் ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடல்: ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிப்பு
நிலச்சரிவால் ஜம்மு -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. இதனால், ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
3. கடந்த 5 ஆண்டுகளில் 1.3 கோடி வீடுகள் கட்டி கொடுத்துள்ளோம்; பிரதமர் மோடி
கடந்த 5 ஆண்டுகளில் 1.3 கோடி வீடுகள் கட்டி கொடுத்துள்ளோம் என்று பிரதமர் மோடி கூறினார்.
4. வேதாரண்யத்தில் 3 கூரை வீடுகள் எரிந்து நாசம் ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம்
வேதாரண்யத்தில் 3 கூரை வீடுகள் எரிந்து நாசமாயின. இதில் ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம் அடைந்தன.
5. கடன் வாங்கி பசுமை வீடு கட்டிய பயனாளிகள் அரசு பணம் வழங்காததால் தவிப்பு
கடன் வாங்கி பசுமை வீடு கட்டியவர்களுக்கு அரசு இன்னும் பணம் வழங்காததால் பயனாளிகள் தவித்து வருகின்றனர்.