உலக செய்திகள்

அமெரிக்காவில் பயங்கரம் வளர்ப்பு நாய்களுக்கு இரையான முதியவர் + "||" + For foster dogs Prey elderly

அமெரிக்காவில் பயங்கரம் வளர்ப்பு நாய்களுக்கு இரையான முதியவர்

அமெரிக்காவில் பயங்கரம் வளர்ப்பு நாய்களுக்கு இரையான முதியவர்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வீனஸ் நகரை சேர்ந்தவர் பிரெட்டி மேக் (வயது 57). ஊருக்கு ஒதுக்குபுறமான பகுதியில் தனியாக வசித்து வந்த பிரெட்டி மேக், செல்லப்பிராணிகளாக 10-க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்து வந்தார்.
வாஷிங்டன், 

இந்த நிலையில், அண்மையில் பிரெட்டி மேக் திடீரென மாயமானார். இது குறித்து அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் பிரெட்டி மேக் தங்கியிருந்த வீட்டை சுற்றிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வீட்டின் அருகே மனித எலும்புகள் துண்டு துண்டாக கிடப்பதையும், அதில் நாயின் முடி ஒட்டியிருப்பதையும் கண்டுபிடித்தனர். மேலும் அங்கு கிடந்த கிழிந்த ஆடைகளை கொண்டு விசாரித்ததில், இறந்தவர் பிரெட்டி மேக் என்பது உறுதி செய்யப்பட்டது.

பிரெட்டி மேக்கை, அவர் வளர்த்த நாய்களே கடித்து கொன்று அவரது உடலை தின்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதே சமயம் வயது மூப்பு காரணமாக இறந்து கிடந்த பிரெட்டி மேக்கின் உடலை நாய்கள் தின்றனவா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.