உலக செய்திகள்

சோமாலியா ஓட்டலில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 26 பேர் பலி + "||" + 26 killed in deadly Somalia hotel siege

சோமாலியா ஓட்டலில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 26 பேர் பலி

சோமாலியா ஓட்டலில்  பயங்கரவாதிகள் தாக்குதல் : 26 பேர் பலி
சோமாலியா ஓட்டலில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியாகினர்.
மொகடிசு,

சோமாலியா நாட்டின் கிஸ்மேயோ என்ற துறைமுக நகரில் மெடினோ என்ற ஓட்டல் அமைந்துள்ளது.  இந்த ஓட்டலுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் அடிக்கடி வந்து செல்வது வழக்கம்.  இந்நிலையில், துப்பாக்கிகளுடன் வந்த தீவிரவாதிகள் சிலர் கார் வெடிகுண்டு ஒன்றை முதலில் வெடிக்க செய்து தாக்குதலில் ஈடுபட்டனர்.  இதன்பின் ஓட்டலுக்குள் புகுந்தனர்.

அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து பதிலடி கொடுத்தனர்.  இதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.  இந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு சோமாலியா நாட்டின் அல் ஷபாப் என்ற கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பொறுப்பேற்று கொண்டது.  

கென்யா நாட்டைச்சேர்ந்த 3 பேர், தான்சானியா நாட்டைச்சேர்ந்த 3 பேர்,  2 அமெரிக்கர்கள், பிரிட்டனைச்சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்ட 26 பேர்களில் அடங்குவர் என்று சோமாலியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.