வர்த்தக சட்டத்தின் 301-வது பிரிவின் கீழ் இந்தியா மீதும் விசாரணை - அமெரிக்கா


வர்த்தக சட்டத்தின் 301-வது பிரிவின் கீழ் இந்தியா மீதும் விசாரணை - அமெரிக்கா
x
தினத்தந்தி 13 July 2019 11:41 AM GMT (Updated: 13 July 2019 12:25 PM GMT)

இறக்குமதிகளுக்கு வரி விதிப்பை அதிகப்படுத்துவதற்கு முன்னோட்டமாக, வர்த்தக சட்டத்தின் 301-வது பிரிவின் கீழ் இந்தியா மீதும் விசாரணை மேற்கொள்ளப்படலாம் என டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது.

வாஷிங்டன்,

அண்மையில் இந்தியாவிற்கான வர்த்தக முன்னுரிமை அந்தஸ்தை அமெரிக்கா ரத்து செய்தது, பதிலுக்கு  அமெரிக்க இறக்குமதிப் பொருட்கள் மீது இந்தியா கூடுதல் வரி விதிப்பு என உரசல் எழுந்து தற்போது இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்திய சந்தையை சமமாகவும் நியாயமாகவும் அணுக அனுமதிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. அறிவுசார் சொத்துரிமைகள், காப்புரிமைகள் தொடர்பாக சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.

மேலும் இந்தியாவில் செயல்படும் அமெரிக்க பணப்பரிவர்த்தனை நிறுவனங்கள் இந்தியாவிலேயே டேட்டாக்களை சேமித்து பராமரிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு எட்டப்படாவிட்டால், இந்தியா மீதும் 301 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்கப்படும் என அமெரிக்க வர்த்தக துணை பிரதிநிதி ஜெப்ரி கெர்ரிஷ் கூறியுள்ளார். அமெரிக்க வர்த்தக சட்டத்தின் 301-வது பிரிவின் கீழ், விசாரணை நடத்திய பிறகே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் வர்த்தகப் போர் மூண்டது குறிப்பிடத்தக்கது.

Next Story