உலக செய்திகள்

இமாச்சல பிரதேசத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து + "||" + 30, Including Soldiers, Trapped As Building Collapses In Himachal's Solan

இமாச்சல பிரதேசத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

இமாச்சல பிரதேசத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து
இமாச்சல பிரதேசத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கட்டிட இடிபாடுகளில் ராணுவ வீரர்கள் உள்பட 30 -க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.
சிம்லா, 

இமாச்சல பிரதேசத்தின் தலைநகர் சிம்லாவில் இருந்து 55 கி.மீட்டர் தொலைவில் உள்ள சோலான் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.  

இந்த கட்டிட இடிபாடுகளுக்குள் ராணுவ வீரர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.  விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

தற்போது வரை  காயங்களுடன் 10 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்  தகவல்கள் கூறுகின்றன.