பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கனமழையால் வெள்ளம்: 28 பேர் பலி


பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கனமழையால் வெள்ளம்: 28 பேர் பலி
x
தினத்தந்தி 16 July 2019 8:27 AM GMT (Updated: 16 July 2019 8:27 AM GMT)

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி 28 பேர் பலியாகியுள்ளனர்.

இஸ்லமாபாத்,

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள நீலம் பள்ளத்தாக்கு என்ற இடத்தில், கடந்த சில தினங்களாக பேய் மழை பெய்து வருகிறது.  இந்த கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான இடங்கள் வெள்ள நீரில் மிதக்கின்றன. மசூதிகள், வீடுகள் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.  

லாஸ்வா என்ற பகுதி வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேக வெடிப்பு ஏற்பட்டதால் பெய்த கனமழையில் 150க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 12க்கும் மேற்பட்டோரை காணவில்லை. 28 பேர் வரை பலியாகி இருப்பதாக  தகவல்கள் வெளிவந்துள்ளன. மொபைல் இணையதள சேவைகளும் முடங்கியுள்ளன. 

வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகளில் சிக்கி தவித்த 52 பேரை பாகிஸ்தான் ராணுவம் பத்திரமாக மீட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. தாழ்வான இடங்களில் வசித்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

Next Story