உலக செய்திகள்

குடித்துவிட்டு விமானத்தில் தகராறு : ஆஸ்திரேலிய மாடல் அழகிக்கு தண்டனை + "||" + Australian Model, 25, Sentenced To Probation In Air Rage Incident

குடித்துவிட்டு விமானத்தில் தகராறு : ஆஸ்திரேலிய மாடல் அழகிக்கு தண்டனை

குடித்துவிட்டு விமானத்தில் தகராறு : ஆஸ்திரேலிய மாடல் அழகிக்கு தண்டனை
ஆஸ்திரேலிய மாடல் அழகி குடித்துவிட்டு விமானத்தில் தகராறு செய்த குற்றத்துக்காக 3 ஆண்டுகளுக்கு நன்னடத்தை சோதனைக் கண்காணிப்பு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிட்னி,

2017-ல் ஆஸ்திரேலியா சார்பில் மிஸ் வேர்ல்ட் இறுதிப் போட்டியில் பங்கேற்றவரும், அதே ஆண்டு வளரிளம் பருவத்தில் பலாத்காரத்துக்கும், கொடுமைகளுக்கும் ஆளானது குறித்து ஒரு மணி நேரம் பேஸ்புக் லைவ் பதிவிட்டும் பிரபலமடைந்தவர் அடவ் மார்ன்யங்.

தனது 10 வயதில் தென் சூடானில் இருந்து போரால் பாதிப்புக்கு ஆளாகி ஆஸ்திரேலியாவில் குடியேறியவர். 25 வயதான அவர் கடந்த பிப்ரவரியில் மெல்போர்னில் இருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு செல்லும் விமானத்தில் பயணித்த போது அதீத குடிபோதையில் தகராறில் ஈடுபட்டு விமான பணிக்குழுவைத் தாக்கி ஆபாசமாகவும் நடந்து கொண்டார்.

அவருக்கு 100 மணி நேர சமூக சேவை, 3 ஆண்டுகள் நன்னடத்தை சோதனைக் கண்காணிப்பு, குடிபோதையிலிருந்து மீள்வதற்கான ஆலோசனைகளையும் வழங்க லாஸ் ஏஞ்சலஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. தான் போதையால் தன் சுய குணாதிசயங்களை இழந்து, மிக மோசமாக நடந்து கொண்டதாக அடவ் மார்ன்யங் வருத்தம் தெரிவித்துள்ளார்.