உலக செய்திகள்

ஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு: மலேசிய முன்னாள் பிரதமர் மீது கோர்ட்டில் விசாரணை தொடங்கியது + "||" + Rs.5½ crores in a single day: Court proceedings against former Malaysian Prime Minister

ஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு: மலேசிய முன்னாள் பிரதமர் மீது கோர்ட்டில் விசாரணை தொடங்கியது

ஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு: மலேசிய முன்னாள் பிரதமர் மீது கோர்ட்டில் விசாரணை தொடங்கியது
ஒரே நாளில் ரூ.5½ கோடி செலவு செய்த மலேசிய முன்னாள் பிரதமர் மீது கோர்ட்டில் விசாரணை தொடங்கியது.
கோலாலம்பூர்,

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் தனது பதவி காலத்தில், மலேசிய மேம்பாட்டு நிறுவனத்திடம் இருந்து சுமார் ரூ.70 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவரும், அவரது மனைவியும் லஞ்ச பணத்தில் ஆடம்பர பொருட்களை வாங்கி குவித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தாக குற்றம் சாட்டப்பட்டது.


கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, அவர் மீதான ஊழல் வழக்கு விசாரணை வேகம் பெற்றது. அவர் மீது 3 நம்பிக்கை மோசடி வழக்குகளும், ஒரு அதிகார துஷ்பிரயோக வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், நஜீப் ரசாக் இத்தாலியில் இருந்து ஒரு ஆடம்பர நகையை வாங்க தனது ‘கிரெடிட் கார்டு’ மூலம் ஒரே நாளில் 8 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.5½ கோடி) செலுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக கோர்ட்டில் விசாரணை தொடங்கி இருக்கிறது.