உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 16 July 2019 11:01 PM GMT (Updated: 16 July 2019 11:01 PM GMT)

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஒரு மசூதி அருகே அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தது.


* அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஈரானுடன் போரை விரும்பவில்லை, ஆனால் அவரை சுற்றி இருக்கும் நபர்கள்தான் அதனை விரும்புகிறார்கள் என ஈரான் வெளியுறவு மந்திரி ஜாவத் ஷெரீப் கூறினார்.

* ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் உள்ள ஒரு மசூதி அருகே அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்து சிதறியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தார். மேலும் 25 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

* நியூசிலாந்தின் ஆக்லாந்து சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு சென்று கொண்டிருந்த எமிரேட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் காற்றின் வேகம் காரணமாக நடுவானில் பயங்கரமாக குலுங்கியது. இதில் பயணிகள் சிலரும், விமான பணிப்பெண்களும் காயம் அடைந்தனர்.

* அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் கியாஸ் குழாயில் வெடிப்பு ஏற்பட்டு தீப்பிடித்ததில் ஒருவர் உயிர் இழந்தார். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

Next Story