உலக செய்திகள்

பிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம் + "||" + Soldier flew in the air in France Adventure

பிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்

பிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்
பிரான்சில், அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் செய்த சாகசத்தை கண்டு பார்வையாளர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
பாரீஸ்,

பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14-ந் தேதி தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாரீசில் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இதில் அதிபர் மெக்ரான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது அங்கு விசித்திரமான காட்சி ஒன்று அரங்கேறியது.


சிறிய ஜெட் எந்திரத்தில் நின்றபடி கருப்பு நிற உடையணிந்த ஒருவர் துப்பாக்கியுடன் அந்தரத்தில் பறந்து வட்டமடித்தார். ராணுவ வீரரான பிரான்கி ஜபாதா என்பவர் தானே தயாரித்த ‘பிளைபோர்ட்’ என்ற ஜெட் பவர் எந்திரத்தில் பறந்து சாகசத்தில் ஈடுபட்டார். இது பார்வையாளர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தாங்கள் பார்ப்பது கனவா, நிஜமா என்று புரியாமல் வியப்புடன் பார்த்து ரசித்தனர்.

பலர் ஆர்வத்துடன் தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். அதிபர் மெக்ரான் இது தொடர்பான வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டு, நவீனம் மற்றும் புதுமையான தங்களது ராணுவத்தால் பெருமை அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பிரான்சில் தொழிலாளியை தாக்கிய சவுதி இளவரசிக்கு சிறை தண்டனை
பிரான்சில் தொழிலாளியை தாக்கிய சவுதி இளவரசிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2. அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ ஜி 7 நாட்டு தலைவர்கள் ஒப்புதல் - மேக்ரான்
அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு முடிந்தவரை விரைவாக உதவுவதற்கு ஜி 7 நாட்டு தலைவர்கள் அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளனர் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறி உள்ளார்.
3. இந்தியா வளர்ச்சியின் பாதையில் செல்கிறது -பிரான்சில் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு
இந்தியா வளர்ச்சியின் பாதையில் செல்வதாக பிரான்சில் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.
4. காஷ்மீர் இருநாட்டு விவகாரம்: புகார் கூறிய பாகிஸ்தானிடம் பிரான்ஸ் பதில்
காஷ்மீர் இருநாட்டு விவகாரம் என புகார் கூறிய பாகிஸ்தானிடம் பிரான்ஸ் பதிலளித்துள்ளது.
5. பிரான்சின் கியாஸ் நிலையம் ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உள்பட 3 பேர் பலி
பிரான்சின் கியாஸ் நிலையம் ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உள்பட 3 பேர் பலியாகினர்.