உலக செய்திகள்

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது + "||" + 26/11 mastermind Hafiz Saeed arrested from Lahore

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளதாக பாக். ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இஸ்லமாபாத்,

பாகிஸ்தான் நாட்டில் இயங்கிவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் கடந்த 26-11-2008 முதல் 29-11-2008 வரை இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை நகரில் 12 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தினர். இந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 166 பேர் உயிரிழந்தனர்.

இதுதவிர, இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் தொடர்புடைய பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீத். அமெரிக்க அரசால் கடந்த 2014-ம் ஆண்டு சர்வதேச தீவிரவாதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஹபீஸ் சயீதின் தலைக்கு ஒரு கோடி டாலர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவி வந்தான். 

ஹபீஸ் சயீத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா சர்வதேச நாடுகள் மூலம் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம் அளித்து வந்தது. இந்த நிலையில், ஹபீஸ் சயீத், லாகூரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிராக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சர்வதேச நிதி நடவடிக்கை சிறப்புக்குழு இம்ரான் கான் அரசுக்கு கடும் நெருக்கடி அளித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஹபீஸ் சயீத்தின் அன்றாட செலவுக்கு பணம் அனுமதிக்க வேண்டும் -ஐநாவிடம் பாகிஸ்தான் கோரிக்கை
சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத்திற்கு தேவையான அடிப்படை செலவுக்கு பணத்தை எடுக்க அனுமதிக்க வேண்டும் என ஐநா பாதுகாப்பு குழுவிடம் பாகிஸ்தான் கோரிக்கை வைத்து உள்ளது.
2. பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் கைது செய்திருப்பது மற்றொரு நாடகம் - இந்திய வெளியுறவுத்துறை
பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் கைது செய்திருப்பது மற்றொரு நாடகம் மட்டும்தான் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
3. மும்பையில் தீவிரவாத தாக்குதலில் எனக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை - ஹபீஸ் சயீத்
மும்பையில் 2008-ம் ஆண்டு நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் தமக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் லாகூர் உயர் நீதிமன்றத்தில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சயீத் தெரிவித்துள்ளார்.
4. ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை என்பது பாகிஸ்தானின் வேஷம் -இந்தியா
ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை எடுப்பது போன்று காட்டிக்கொள்வது பாகிஸ்தானின் வேஷம் என இந்தியா கூறியுள்ளது.
5. பயங்கரவாத செயல்களுக்கு நிதி: ஹஃபீஸ் சையத் மீது பாகிஸ்தான் 23 வழக்குகள் பதிவு
மும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய ஹஃபீஸ் சையத் மீது பாகிஸ்தான் வழக்குப் பதிவு செய்துள்ளது.