உலக செய்திகள்

ஒரு கப் டீயின் விலை ரூ13,800 + "||" + TEA-PING THE SCALES Hotel opposite Buckingham Palace serving ‘UK’s most expensive cup of tea’ that costs £500 for a pot

ஒரு கப் டீயின் விலை ரூ13,800

ஒரு கப் டீயின் விலை ரூ13,800
பக்கிங்கம் அரண்மணைக்கு எதிரே அமைந்துள்ள ஓட்டலில் ஒரு கப் டீ இந்திய மதிப்பில் 13 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
லண்டன்

இங்கிலாந்தின்  பக்கிங்கம் அரண்மனைக்கு எதிரே தி ரூபென்ஸ் என்ற ஓட்டல் அமைந்துள்ளது. இந்த ஓட்டலில் லண்டனிலேயே விலை உயர்ந்த டீ விற்பனை செய்யப்படுகிறது. இங்கு ஒரு கப் டீ 200 டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதன் இந்திய மதிப்பு கிட்டத்தட்ட 13 ஆயிரத்து 800 ரூபாயாகும். கோல்டன் டிப்ஸ் என்ற நிறுவனம் இலங்கையில் இருந்து சிறப்பான முறையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலைகளை பெறுகிறது.

இந்த தேயிலைகள் வெல்வெட் துணியில் உலர்த்தப்படுகின்றன. இந்த ஓட்டலுக்கு மட்டுமே பிரத்யேகமாக இந்த தேயிலைகள் அனுப்பப்படுவதால் அங்கு அதிக விலைக்கு டீ விற்பனை செய்யப்படுகிறது.

பக்கிங்கம் அரண்மனையை ரசித்தபடி ஓட்டலுக்கு உள்ளே அமர்ந்திருப்பவர்களுக்கு வெள்ளிப் பாத்திரத்தில் டீ பரிமாறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மனிதர்களின் முகங்களை போன்று தோற்றமளிக்கும் பூனைகளின் வீடியோ
மனிதர்களின் முகங்களை போன்று தோற்றமளிக்கும் பூனைகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2. விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு: கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பலி
விருந்து நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டினால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பலியாகினர்.
3. 12 கை விரல்கள் - 20 கால் விரல்கள் சூனியக்காரி என்று ஒதுக்கப்படும் வயதான பெண்
12 கை விரல்கள் - 20 கால் விரல்கள் கொண்ட வயதான பெண்ணை சூனியக்காரி என்று கிராமத்தினர் ஒதுக்கி வைத்துள்ளனர்.
4. சமைக்காத இறைச்சியை உட்கொண்டவருக்கு மூளை, நுரையீரல், மார்பில் பரவிய 700 நாடாப்புழுக்கள்
சமைக்காத இறைச்சியை உட்கொண்டதால் பிறகு மூளை, நுரையீரல் மற்றும் மார்பில் 700 நாடாப்புழுவுடன் அவதிப்பட்டவர்.
5. செடிகளை சாப்பிட்ட இரண்டு ஆடுகளை கைது செய்த போலீசார்
தெலுங்கானா மாநிலம் ஹுசுராபாத் பகுதியில் செடிகளை சாப்பிட்டதால் இரண்டு ஆடுகள் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளன.