சூறாவளி புயலை எதிர்கொள்ளும் தைவான் ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம் மாற்றியது


சூறாவளி புயலை எதிர்கொள்ளும் தைவான் ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம் மாற்றியது
x
தினத்தந்தி 17 July 2019 12:12 PM GMT (Updated: 17 July 2019 1:07 PM GMT)

சூறாவளி புயலை எதிர்கொள்ளும் தைவான் ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம் மாற்றம் செய்துள்ளது.

தைவானின் யிலான் பகுதியை நாளை சூறாவளி புயல் தானாஸ் தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு தைவான் எதிர்கொள்ளும் முதல் சூறாவளி புயல் இதுவாகும். அங்கு கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மழையும் பெய்கிறது. வெள்ளம், வானிலையில் பெரும் மாற்றம் காரணமாக  விமான சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு மீட்பு பணிகளுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தைவான் நாட்டில் 2009-ம் ஆண்டு சூறாவளி புயல் தாக்கியதில் 700 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Next Story