உலக செய்திகள்

ஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவில் தீ விபத்து 12 பேர் பலி + "||" + At least 12 presumed dead in Japan studio fire: Official

ஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவில் தீ விபத்து 12 பேர் பலி

ஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவில் தீ விபத்து 12 பேர் பலி
ஜப்பான் நாட்டிலுள்ள அனிமேஷன் ஸ்டூடியோ ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் பலியாகியுள்ளனர்.
ஜப்பானின் க்யோட்டோ, நகரிலுள்ள அனிமேஷன் ஸ்டூடியோவில் தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் வானளாவிய உயரத்துக்கு புகை எழுந்திருக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என க்யோட்டோ நகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தீவிபத்து ஏற்பட்ட பகுதியில் எரிபொருள் போன்ற திரவத்தை ஊற்றியதாக நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீ விபத்தில் சிக்கி 35க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மேலும் தீவிபத்து ஏற்பட்ட 3 அடுக்குகள் கொண்ட கட்டிடத்துக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.