ரஷியாவில் சாலையில் உலாவிய புலியால் பரபரப்பு


ரஷியாவில் சாலையில் உலாவிய புலியால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 July 2019 10:45 PM GMT (Updated: 18 July 2019 8:17 PM GMT)

ரஷியாவில் சாலையில் உலாவிய புலியால் பரபரப்பு ஏற்பட்டது.

மாஸ்கோ,

ரஷியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள இவானோவோ நகரை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது வீட்டில் ஒரு புலியை வளர்த்து வருகிறார். அண்மையில் இவர் அந்த புலியை காரில் ஏற்றிக்கொண்டு சென்றார். அப்போது நடு சாலையில் சிக்னலில் கார் நின்றது.

அப்போது காரில் இருந்த புலி திடீரென முரண்டு பிடித்தது. இதையடுத்து இளைஞர் புலியை கட்டுப்படுத்த முயன்றார். கார் கதவின் கண்ணாடி மூடப்படாமல் இருந்ததால் அந்த வழியாக புலி சாலையில் குதித்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர் காரில் இருந்து இறங்கி புலியை பிடிக்க முயன்றார். ஆனால் புலி அவரிடம் சிக்காமல் சாலையில் ஓடி ஆட்டம் காட்டியது. அப்போது சாலையில் நடந்த சென்ற மக்கள் இதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அந்த இளைஞர் புலியை பிடித்து, காருக்குள் தள்ளி பூட்டினார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதற்கிடையில் ஆபத்தான உயிரினத்தை அபாயகரமாக கையாண்டதாக அந்த இளைஞர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story