உலக செய்திகள்

இரண்டு எண்ணெய் டேங்கர்களை பறிமுதல் செய்த ஈரான் எச்சரிக்கை விடுத்த இங்கிலாந்து + "||" + UK 'deeply concerned' over tanker seizure

இரண்டு எண்ணெய் டேங்கர்களை பறிமுதல் செய்த ஈரான் எச்சரிக்கை விடுத்த இங்கிலாந்து

இரண்டு எண்ணெய் டேங்கர்களை பறிமுதல் செய்த ஈரான் எச்சரிக்கை விடுத்த இங்கிலாந்து
இரண்டு எண்ணெய் டேங்கர்களை, 23 பணியாளர்களுடன் ஈரான் பறிமுதல் செய்து உள்ளது. இதனால் இங்கிலாந்து எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனால் ஹார்முஸ் பகுதியில் பதற்றங்கள் அதிகரித்து உள்ளது.
ஈரான், ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு எண்ணெய் டேங்கர்களை, 23 பணியாளர்களுடன் கைப்பற்றிய பின்னர் அனைத்து இங்கிலாந்து  கப்பல்களும் ஹார்முஸ் ஜலசந்தி கடல் வழியை தவிர்த்துக் கொள்ளுமாறு இங்கிலாந்து  எச்சரிக்கை விடுத்துள்ளது.

வளைகுடாவில் பதற்றங்கள்  அதிகரிப்பது குறித்து விவாதிக்க அரசாங்கத்தின் கோப்ரா குழுவின் அவசர கூட்டத்தைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,. இங்கிலாந்து  நாட்டிற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் டேங்கர் கப்பல்களை ஈரான் கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

வளைகுடாவில்  இங்கிலாந்து கொடியிடப்பட்ட டேங்கரை ஈரான் பறிமுதல் செய்தது ஏற்று கொள்ள முடியாது.  இது  "ஆழ்ந்த கவலை" அளிப்பதாக  உள்ளது என இங்கிலாந்து அரசாங்கம் கூறியுள்ளது.

சர்வதேச கடல் விதிமுறைகளை அவை மீறியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. முதலில் ஸ்டீனா இம்பிரோ (stena impero) என்ற ஒரு சரக்கு கப்பலை பறிமுதல் செய்திருப்பதாக ஈரான் அரசு அறிவித்தது. ஆனால் எம்வி மாச்டர் என்ற மற்றொரு கப்பலையும் ஈரான் கடற்படையினர் பிடித்துச் சென்றதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விளக்கமளித்த ஈரான், எம்வி மாச்டர்  கப்பலுக்கு எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டது. அதன் பின்னர், கப்பல் அதன் பயணத்தை தொடர நாங்கள் அனுமதி அளித்து விட்டோம் என தெரிவித்தனர். எம்வி மாச்டர் கப்பல் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டதை அந்நிறுவனம் தரப்பில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இம்மாத தொடக்கத்தில், சிரியாவுக்கு கச்சா எண்ணெய்யை கொண்டு செல்ல முயன்றதாக ஈரான் சரக்கு கப்பலை இங்கிலாந்து  கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இதற்கு பதிலடியாக ஈரான் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இப்பிரச்சினை காரணமாக இங்கிலாந்து  ஈரான் உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பேசிய இங்கிலாந்து  பாதுகாப்பு செயலாளர் ஜெர்மி ஹனட், பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், ஈரான் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ளும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இங்கிலாந்துக்கு ஆதரவாக நிற்பதாக உறுதியளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் பெரிய சிக்கலில் இருப்பதாக எச்சரித்துள்ளார்.