அமெரிக்காவில் வறுத்தெடுக்க தொடங்கிய வெயில்


அமெரிக்காவில் வறுத்தெடுக்க தொடங்கிய வெயில்
x
தினத்தந்தி 20 July 2019 4:11 PM GMT (Updated: 20 July 2019 4:11 PM GMT)

அமெரிக்காவில் வறுத்தெடுக்க தொடங்கிய வெயிலால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

நியூயார்க்,

வெயில் கொளுத்துகிறது. மனம் நிழலில் இளைப்பாற விரும்புகிறது. மழைக்கு ஏங்கித் தவிக்கிறது. ஆனால் இதே பூமியில் இன்னொரு பக்கம் குளிர்காலமாக உள்ளது. அவர்கள் வெயில் முகம் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். 

இந்த பூமியில் இப்படி மழை, வெயில், புயல், வெள்ளம், பஞ்சம் என பல காலநிலைகள் மாறிமாறி ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அடிக்கடி மாறும் காலநிலைகளே உயிரினங்களின் வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்கிறது. 

இந்நிலையில்,  அமெரிக்காவில் வெயில் வறுத்தெடுக்க தொடங்கி உள்ளது. வாஷிங்டன், நியூயார்க், பாஸ்டன் உள்ளிட்ட நகரங்களிலும் கனடாவிலும் வெப்ப நிலை 100 டிகிரியை தாண்டும் என்று அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

20 கோடி பேர் இந்த வெயிலால் பாதிப்பு அடைவார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகிலேயே அதிகமான வெப்ப வாயுக்களை வெளியேற்றும் நாடு அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story