உலக செய்திகள்

சீனாவில் ஹாங்காங் நடிகருக்கு கத்திக்குத்து + "||" + Hong Kong actor Simon Yam stabbed on stage in China

சீனாவில் ஹாங்காங் நடிகருக்கு கத்திக்குத்து

சீனாவில் ஹாங்காங் நடிகருக்கு கத்திக்குத்து
சீனாவில், ஹாங்காங் நடிகர் மீது கத்திக்குத்து நடத்தப்பட்டது.
பீஜிங்,

ஹாங்காங் நடிகர் சைமன் யாம். இவர் படத்தயாரிப்பாளரும் ஆவார். ஏராளமான விருது பெற்ற படங்களில் தோன்றி நடித்து புகழ் பெற்றிருக்கிறார்.

இந்த நிலையில் சீனாவில் ஜோங்ஷான் நகருக்கு சென்று அங்கு ஒரு விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேடையில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென ஒரு நபர் அவரை நெருங்கிச்சென்று, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, கண் இமைக்கும் நேரத்தில் அவரது வயிற்றிலும், கையிலும் குத்தி வீழ்த்தினார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.


நடிகர் சைமன் யாம் உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் உயிராபத்து எதுவும் இல்லை என தெரிய வந்துள்ளது.

அவரை கத்தியால் குத்தி வீழ்த்திய நபரை உடனடியாக போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர் எதற்காக நடிகர் சைமன் யாமை குத்தினார் என்பது பற்றி துருவித்துருவி விசாரணை நடத்துகின்றனர்.

இந்த சம்பவம், சீனாவில் மட்டுமல்ல, ஹாங்காங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.