உலக செய்திகள்

7 மாத குழந்தையை கொன்ற இந்திய தாய்க்கு 6 வருடம் சிறை - லண்டன் கோர்ட்டு தீர்ப்பு + "||" + Indian mother sentenced to 6 years for killing 7-month-old baby - London Court Judgment

7 மாத குழந்தையை கொன்ற இந்திய தாய்க்கு 6 வருடம் சிறை - லண்டன் கோர்ட்டு தீர்ப்பு

7 மாத குழந்தையை கொன்ற இந்திய தாய்க்கு 6 வருடம் சிறை - லண்டன் கோர்ட்டு தீர்ப்பு
7 மாத குழந்தையை கொன்ற இந்திய தாய்க்கு, 6 வருடம் சிறை தண்டனை விதித்து லண்டன் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
லண்டன்,

இங்கிலாந்தில் லண்டன் நகரில் வசித்துவரும் இந்திய வம்சாவளியினர் ஷாலினா பத்மநாபா (வயது 33). இவர் பல வருடங்களாக தனது கணவருடன் சேர்ந்து கருத்தரித்தல் சிகிச்சை எடுத்துக்கொண்டதன் பலனாக ஷாகன் என்ற பெண் குழந்தையை பெற்றார். ஆனால் அந்த குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததாலும், பல்வேறு சிகிச்சைகள் தேவைப்பட்டதாலும் 4 மாதங்கள் வரை ஆஸ்பத்திரியிலேயே இருந்தது. குழந்தை வீடு திரும்பிய பின்னரும் குழாய் மூலம் உணவு செலுத்துதல் போன்ற தனிக்கவனம் செலுத்த வேண்டியிருந்தது.


குழந்தைக்கு 7 மாதம் ஆன நிலையில் திடீரென ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு 2017-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி அந்த குழந்தை இறந்தது. பிரேத பரிசோதனையில் குழந்தையின் மண்டை ஓட்டில் 2 இடங்களில் எலும்பு முறிவும், கால்களில் எலும்பு முறிவும் இருந்தது தெரிந்தது. போலீஸ் விசாரணையில் முதலில் உண்மையை மறைத்த ஷாலினா பின்னர், தனக்கு மிகவும் வலிமையான குழந்தை தான் வேண்டும் என்றார். இதற்காக அவர் அந்த குழந்தையின் தலையை சுவரில் மோதியும், கால்களை முறித்தும் துன்புறுத்தியதாலேயே அந்த குழந்தை இறந்தது தெரிந்தது. இந்த வழக்கை விசாரித்த லண்டன் கோர்ட்டு ஷாலினாவுக்கு 6 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

தொடர்புடைய செய்திகள்

1. மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா தலைவர் குண்டு வீசிக்கொலை
மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா தலைவர் குண்டு வீசிக்கொல்லப்பட்டார்.
2. மதுரையில் டீக்கடைக்காரர் குத்திக்கொலை; குடித்த டீக்கு காசு கேட்டதால் 5 பேர் கும்பல் வெறிச்செயல்
குடித்த டீக்கு காசு கேட்டதால் மதுரையில் டீக்கடைக்காரர் ஒருவர் 5 பேர் கும்பலால் கொலை செய்யப்பட்டார்.
3. பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்க கோரி தகராறு: கழுத்தை அறுத்து தந்தையை கொன்றவருக்கு 10 ஆண்டு ஜெயில்
பிரிந்து சென்ற மனைவியை சேர்த்து வைக்க கோரி ஏற்பட்ட தகராறில் கழுத்தை அறுத்து தந்தையை கொன்றவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
4. ராஜாக்கமங்கலம் அருகே கட்டையால் தாக்கப்பட்ட முதியவர் சாவு கொலை வழக்காக மாற்றம்
ராஜாக்கமங்கலம் அருகே கட்டையால் தாக்கப்பட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. சூனாம்பேடு அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை
சூனாம்பேடு அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்டார்.