உலக செய்திகள்

வாட்ஸ்அப்பில் வேலைவாய்ப்பு மோசடி: கேரளாவை சேர்ந்த 9 பேர் அமீரகத்தில் தவிப்பு + "||" + Employment fraud on WhatsApp: 9 persons from Kerala helplessness in UAE

வாட்ஸ்அப்பில் வேலைவாய்ப்பு மோசடி: கேரளாவை சேர்ந்த 9 பேர் அமீரகத்தில் தவிப்பு

வாட்ஸ்அப்பில் வேலைவாய்ப்பு மோசடி: கேரளாவை சேர்ந்த 9 பேர் அமீரகத்தில் தவிப்பு
வாட்ஸ்அப்பில் வந்த வேலைவாய்ப்பு மோசடி செய்தியால், கேரளாவை சேர்ந்த 9 பேர் அமீரகத்தில் தவித்து வருகின்றனர்.
துபாய்,

மோசடி ஏஜெண்டை நம்பி, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்ற கேரளாவை சேர்ந்த 9 பேர், அங்கு ஏமாற்றப்பட்டு தவித்து வருகிறார்கள். அவர்கள் கேரளாவில் இருந்தபோது, “ஐக்கிய அரபு அமீரகத்தில் 15 நாளில் வேலை வாங்கித் தரப்படும்“ என்று வாட்ஸ்அப்பில் வந்த ஒரு செய்தியை நம்பி, அதில் குறிப்பிடப்பட்ட ஷபீக் என்ற ஏஜெண்டை சந்தித்தனர்.


‘விசிட்‘ விசாவுக்கு ரூ.70 ஆயிரம் அளிக்குமாறு ஷபீக் கூறவே, நகைகளை அடகு வைத்தும், நண்பர்களிடம் கடன் வாங்கியும் அந்த பணத்தை செலுத்தினர். அல் அய்ன் நகரில் சூப்பர் மார்க்கெட்டில் வேலை வாங்கி தருவதாக ஷபீக் உறுதி அளித்தார்.

ஆனால், அபுதாபியில் இறங்கியவுடன், அவர்களை வேறு ஒரு ஏஜெண்ட் அணுகினார். சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் ஜெயிலுக்கு சென்று விட்டதால், வேறு புதிய வேலை தேடித் தருவதாக அந்த ஏஜெண்ட் கூறினார்.

இதனால், தாங்கள் ஏமாற்றப்பட்டதை 9 பேரும் உணர்ந்தனர். அல் அய்ன் நகரில் 5 பேரும், அஜ்மன் நகரில் 4 பேருமாக செய்வதறியாமல் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்திய தூதரகம் பண உதவி அளித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் இருந்து திரும்பியவர்கள்: கேரளாவில் 80 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்
கேரளாவில் சீனாவில் இருந்து திரும்பிய 80 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
2. ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் கொண்டு வரப்படும் எதுவும் கேரளாவில் செயல்படுத்தப்படாது - பினராயி விஜயன்
ஆர்.எஸ்.எஸ். பின்னணியில் கொண்டு வரப்படும் எதுவும் கேரளாவில் செயல்படுத்தப்படாது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
3. குடியுரிமை திருத்த சட்டம் : கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது நெறிமுறை மீறல், மரியாதை மீறல் -கவர்னர் கோபம்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது நெறிமுறை மீறல் மற்றும் மரியாதை மீறல் என்று கேரள கவர்னர் ஆரிஃப் முகமது கான் கூறினார்.
4. ஓசூர் அருகே, வியாபாரியிடம் ரூ.9 லட்சம் மோசடி - 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
ஓசூர் அருகே வியாபாரியிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
5. அதிக வட்டி தருவதாக கூறி ஆன்லைன் நிறுவனம் நடத்தி ரூ.15 லட்சம் மோசடி - கேரளாவை சேர்ந்தவர் கைது
கோவையில் அதிக வட்டி தருவதாக கூறி ஆன்லைன் நிறுவனம் நடத்தி ரூ.15 லட்சம் மோசடி செய்த கேரளாவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-