உலக செய்திகள்

உலகைச்சுற்றி... + "||" + Around the world ...

உலகைச்சுற்றி...

உலகைச்சுற்றி...
* ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களில் தொடர்ந்து வன்முறை ஏற்பட்டு வரும் சூழலில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஹாங்காங்கில் சீன ராணுவ வீரர்கள் குவிக்கப்படுவார்கள் என சீனா தெரிவித்துள்ளது.
* சீனாவின் குய்சோ மாகாணத்துக்கு உட்பட்ட சுய்செங் கிராமத்தில் திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. மேலும் உயரமான மலை பகுதியில் இருந்து பாறைகள் மற்றும் கற்கள் உருண்டு வந்து குடியிருப்பு கட்டிடங்கள் மீது விழுந்தன. இதில் இடிபாடுகளில் சிக்கி 11 பேர் பலியாகினர்.

* ஹோர்முஸ் ஜலசந்தியில் தங்கள் போர் கப்பலை அச்சுறுத்தும் வகையில் அணுகிய ஈரானின் 2-வது ஆளில்லா உளவு விமானத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா ராணுவம் தெரிவித்துள்ளது. எனினும் அந்த விமானம் கடலில் விழுந்ததை பார்க்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.